சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகார்ஜுன்...!!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகார்ஜுன்...!!!
Published on
Updated on
1 min read

சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதியாக டாக்டர். தேவராஜு நாகார்ஜுன் இன்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

பணியிட மாறுதல்:

தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தேவராஜு நாகார்ஜுனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்தது. இதனை ஏற்று குடியரசு தலைவர் கடந்த மாதம் பணியிட மாறுதல் உத்தரவு பிறப்பித்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி:

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நூலக கட்டிட கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிபதியாக டாக்டர். தேவராஜு நாகார்ஜுன்க்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தேவராஜு நாகார்ஜுன் பதவியேற்றதை அடுத்து நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. நீதிபதிகள் காலிப்பணியிடம் 15 ஆக குறைந்துள்ளது.

நீதிபதி தேவராஜு நாகார்ஜுன்:

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 1962 ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி பிறந்த நீதிபதி தேவராஜு நாகார்ஜுன், பள்ளி படிப்பை அரசு பள்ளியில் படித்துள்ளார்.  பின்னர் சட்டப்படிப்பை முடித்த நீதிபதி தேவராஜு நாகார்ஜுன் 1986 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். அவரின் தந்தையிடம் ஜுனியர் வழக்கறிஞராக பணியை தொடங்கிய அவர், 1991 ஆம் ஆண்டு சிவில் நீதிபதியாக தேர்வு செய்யபட்டார்.

பின்னர் சட்ட படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் மாவட்ட நீதிமன்றத்திலும்,  உயர்நீதிமன்ற பதிவராளராகவும் பணியாற்றிய அவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.  இவர் அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 14 தேதி பணி ஓய்வு பெறவுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com