கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறக்கக் கோரி ஆந்திர மாநில அரசுக்கு தமிர்நாடு அரசு கடிதம் எழுதி உள்ளது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து ஆண்டுதோறும் 12 டி.எம்.சி., தண்ணீரை ஆந்திர அரசு திறந்துவிட வேண்டும். அதன்படி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட வேண்டும்.
இதையும் படிக்க : கி.மு. முதலாம் நூற்றாண்டை சேர்ந்த அரிய வகை பொருட்கள் கண்டுபிடிப்பு!
ஆனால், நேற்று வரை சுமார் ஒரு டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டதால், கண்டலேறு அணையின் நீர் இருப்பு தற்போது 16.6 டி.எம்.சி ஆக உள்ளது.
இந்நிலையில், நடப்பு காலத்திற்கான 8 டி.எம்.சி. தண்ணீரை முறைப்படி திறந்து விட வேண்டும் என ஆந்திர மாநில நீர்வளத்துறைக்கு, சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் கடிதம் எழுதி உள்ளார்.