துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நல்ல எண்ணங்களாலும், நல்ல செயல்களாலும் உலகைக் குணப்படுத்துவோம் என்று காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.
துருக்கி - சிரியா எல்லை அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நூர்தாகி நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3 மணிக்கு உணரப்பட்ட நிலநடுக்கம் 7 புள்ளி 9 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து மீண்டும் 11 நிமிடங்களுக்குப் பிறகு, அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 50-க்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 40-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், ”துருக்கி நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் சரிந்து பல உயிர்கள் பலியாகின. ஜோதிட சாஸ்திரப்படி இந்த வருடம் கடினமாக இருக்கும். அதனால் நல்ல எண்ணங்களாலும், நல்ல செயல்களாலும் உலகைக் குணப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் சரிந்தன பல உயிர்கள் பலியாகின.. ஜோதிட சாஸ்திரப்படி இந்த வருடம் கடினமாக இருக்கும். நல்ல எண்ணங்களாலும், நல்ல செயல்களாலும் உலகைக் குணப்படுத்துவோம். — Gayathri Raguramm