நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் உட்பட 21 நகரமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நகரமன்ற கூட்டத்தில் செய்யவுள்ள பணிகள் குறித்து பணிகள் பட்டியலிடப்பட்டது. இதையடுத்து நகரமன்ற உறுப்பினர்கள் பேசுகையில் அதிமுக திமுக பெண் நகர உறுப்பினர்கள் இடையே கருத்து சொல்வதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு காரணமாக பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு முறையாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்து நிவாரண தொகை உள்ளிட்ட நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் நகரமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதன் பின்னர் நகரமன்ற கூட்டத்தில் நகரபகுதியில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனையை நகராட்சி நிர்வாகம் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகரமன்ற தலைவரிடம் நகரமன்ற உறுப்பினர்கள் முறையிட்டனர்.
காவல் துறையினர் ஒத்துழைப்புடன் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படும் என நகரமன்ற தலைவர் செல்வராஜ் தெரிவித்தார். நகரமன்ற கூட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை குறித்து நகரமன்ற உறுப்பினர்கள் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.