கோயம்பேடு - ஆவடி மெட்ரோ; சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தாக்கல்!

கோயம்பேடு - ஆவடி மெட்ரோ; சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தாக்கல்!
Published on
Updated on
1 min read

கோயம்பேடு - ஆவடி மெட்ரோ பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலின் 2வது கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி வரையிலான, 3வது வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட உள்ளன. அதேபோல் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தடத்தை பரந்தூர் வரை நீட்டிக்கவும் மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரை 5வது வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பதாக மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது.

சென்னையின் புறநகர் பகுதிகளான சிறுசேரி - கிளாம்பாக்கம், பூந்தமல்லி - பரந்தூர், கோயம்பேடு - ஆவடி ஆகிய பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பூந்தமல்லி பரந்தூர் செல்ல 50 கிலோமீட்டர் வரையிலும், கோயம்பேடு - ஆவடிக்கு திருமங்கலம், முகப்பேர் வழியாக செல்ல 17 கிலோமீட்டர் வரையிலும், சிறுசேரி - கிளாம்பாக்கம் செல்ல 26 கிலோமீட்டர் என மொத்தம் 93 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படுவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com