சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை ஒருங்கிணைந்த புதிய பன்னாட்டு விமான நிலையம் நவீன வசதிகளுடன். 1260 கோடி முதலீட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி புதிய முனையத்தை திறந்து வைத்தார். இதில் 108 குடியுரிமை கவுண்டர்கள், 100 பயணிகள் பாதுகாப்பு கவுண்டர்கள், 17 லிப்ட்கள், 17 எஸ்கலேட்டர்கள், 6 வாக்கலேட்டர்கள், பயணிகள் உடைமைகள் வரும் ஆறு கண்வயர் பெல்டுகள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் விமான நிலையம் வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் குடியுரிமை சோதனை முடித்து கொண்டு தனது சமூக வலைதளமான எக்ஸ்சில், சர்வதேச முனையத்தில் சிறப்பாக அமைதியாக நடந்த குடியுரிமை சோதனை. விமான நிலையம் உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி என பதிவிட்டு உள்ளார்.
What a smooth clearance at the immigration of our new International Terminal, Chennai @aaichnairport and the new infrastructure is just bang on! Thanks to the concerned authorities