"எடப்பாடி பழனிசாமிக்கு கொள்கையோ கோட்பாடோ கிடையாது" அமைச்சர் கீதாஜீவன்!

"எடப்பாடி பழனிசாமிக்கு கொள்கையோ கோட்பாடோ கிடையாது" அமைச்சர் கீதாஜீவன்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டை மத்திய அரசு பல்வேறு விவரங்களை பற்றி பேசுகையில் எதிர் கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாமல் இருப்பது அவர் ஒரு கொள்கை கோட்பாடற்றவர்  என்பதை காட்டுகிறது என அமைச்சர் கீதாஜீவன் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடியில் கலைஞர் கருணாநிதி பிறந்தாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான மாபெரும் பொதுக்கூட்டமானது  விவிடி சிக்னல் அருகே நடைபெற்றது. இதில் கழக துணை பொதுச்செயலாளரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.ராசா மற்றும் அமைச்சர் கீதாஜூவன்,மேயர் ஜெகன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜுவன் பேசுகையில்," தமிழ்நாடு விவகாரம், சனாதானம், போன்ற விவகாரங்களை மத்திய அரசு பேசும்போது  கூட எதிர்கட்சி தலைவராக இருக்ககூடிய எடப்பாடி பழனிச்சாமி ஒரு வார்த்தைகூட எதிர்த்து பேசவில்லை. அவருக்கு கொள்கையோ கோட்பாடோ எதுவும் கிடையாது தனது பதவியை காப்பாற்றிகொள்ள மட்டும் எதாவது ஒரு அறிக்கையை மட்டும் அவ்வப்போது விடுத்து வருகின்றார். அதனை மத்திய அரசு பயன்படுத்தி எடப்பாடியிடம் இருந்து ஒவ்வொருவரையா இழுத்து வைத்துகொள்ளலாம் என்று நினைக்கின்றது. இதனால் தமிழகத்தில் எதிர்கட்சி கலகலத்து இருக்கின்றது என்று எதிர்கட்சியை விமர்சித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கழக துணை பொதுச்செயலாளரும்  திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.ராசா பேசுகையில்," தமிழகத்தில் திமுக ஆட்சியில் எப்போதாவது எங்கையாவது பிரச்சனை நடந்தால் சட்டம் ஒழுங்கு சரியில்லை, முதல்வர் சரியில்லை, ஆட்சியை கலைக்க வேண்டும் என்று பாஜகவினர் கூறுகின்றனர் ஆனால் பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தின் நிலை என்ன தெரியுமா அங்குள்ள முதல்வர், கவர்னர் மத்திய அமைச்சர் வெளியில் வர முடியாத சூழ்நிலை உள்ளது. மோடி அருகில் இருக்ககூடிய கேபினட் அமைச்சர் வீடு சூறையயாடப்பட்டுள்ளது 200-தேவாலயங்கள் இடிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே  தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என நினைக்கும்  மத்திய அரசு, முதலில் நீங்கள் ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் புடுங்கிவிட்டு, தமிழகத்தில் வந்து புடுங்கு" என்று ஆர்.ராசா ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com