சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுவதை நேரில் ஆய்வு செய்யப்போவதாக நீதிபதிகள் அறிவிப்பு!

சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுவதை நேரில் ஆய்வு செய்யப்போவதாக நீதிபதிகள் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுகிறதா என்பதை இம்மாதம் நேரில் ஆய்வு செய்ய இருப்பதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஒரே நேரத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் எனவும், இதுசம்பந்தமாக பிறப்பித்த உத்தரவை அரசு அமல்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

ஒரு பஞ்சாயத்து அல்லது ஒரு மாவட்டத்தை தேர்வு செய்து  சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதுகுறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறியதை அடுத்து விசாரணையை இம்மாத இறுதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்னிய மரங்கள் அகற்றப்பட்டுள்ளதா என்பதை இம்மாதம் நேரில் ஆய்வு செய்ய இருப்பதாகத் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com