”எதிர்க்கட்சிகளுக்கு பிரிவினை அரசியல் தான் முக்கியம்” - ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

”எதிர்க்கட்சிகளுக்கு பிரிவினை அரசியல் தான் முக்கியம்” -  ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் இடையூறு காரணமாக, குடியரசுத் தலைவா், துணைக் குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் விவர பட்டியலை வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்டுள்ளார். 

மழைக்கால கூட்டத்தொடா் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது முதல் மணிப்பூா் விவகாரத்தை எழுப்பி எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், வெளியுறவு கொள்கை சாதனைகள் மற்றும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் குறித்த விவரங்களைச் சமா்ப்பித்த போதும் எதிா்க் கட்சி உறுப்பினா்கள் கடும் அமளியில் ஈடுபட்டனா். 

இந்த நிலையில், தனது அறிக்கையை வீடியோ பதிவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தேசத்தின் வளா்ச்சியைக் காட்டிலும் பிரிவினை அரசியல்தான் எதிா்க்கட்சிகளுக்கு முக்கியமானதாக உள்ளது என்றும், பல்வேறு நிலைகளில் இத்தகைய முயற்சிகள் நடைபெற்றபோதும்,  நாட்டின் நலன்கள் மீது மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். 

குறிப்பாக, முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் மேம்பாட்டின் மூலமாக நமது நாட்டின் எதிா்காலத்தை வளமானதாக ஆக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்த ஜெய்சங்கர், இதனை நாடாளுமன்றத்தில் ஆலோசிக்கவும், விவாதம் நடத்தவும் எதிா்க்கட்சியினா் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளாா்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com