திமுகவின் ஏவல்துறையாக தமிழக காவல்துறை மாறியிருப்பதாக குற்றச்சாட்டு - அண்ணாமலை

திமுகவின் ஏவல்துறையாக தமிழக காவல்துறை மாறியிருப்பதாக குற்றச்சாட்டு - அண்ணாமலை
Published on
Updated on
1 min read

தமிழகக் காவல்துறை முழுக்க முழுக்க திமுகவின் ஏவல்துறையாகவே மாறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகக் காவல்துறையின் பொய் வழக்குகள் மற்றும் தொடர்ச்சியான அடக்குமுறை காரணமாக, துடிப்பான இளைஞரான பரமக்குடி ஒன்றிய தமிழக பாஜக இளைஞர் அணியின் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், இன்று பார்த்திபனூர் காவல் நிலையத்திலே தீக்குளித்துள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். 

தமிழகக் காவல்துறை முழுக்க முழுக்க திமுகவின் ஏவல்துறையாகவே மாறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறியவர், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து, ஆளுங்கட்சியினர் தூண்டுதலுக்கேற்ப, பாஜகவினரை மிரட்டுவதையும் துன்புறுத்துவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்து ராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு தரணி முருகேசன் மற்றும் தமிழக பாஜக இளைஞர் அணியின் மாநிலத் தலைவர் ரமேஷ் சிவா இருவரும், காவல்நிலையத்தின் முன் போராட்டம் நடத்தியுள்ளனர். காவல்துறையினரின் இது போன்ற பாரபட்சத் தன்மை தொடருமேயானால், தமிழகம் முழுவதும் பாஜகவினரின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com