"ஆண்டவனின் தவறு இல்லை,ஆண்டவர்களின் தவறு" :
சென்னை : சைதாப்பேட்டை அப்பாவு நகர் மற்றும் சுப்பு பிள்ளை தோட்டம் திட்ட பகுதியில் மறுகுடியமர்வு செய்ய தற்காலிக ஒதுக்கீட்டில் குடும்பத்தார்களுக்கு ஆணை வழங்கும் நிகழ்வு மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினர். 2015 ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பு "ஆண்டவனின் தவறு இல்லை அது ஆண்டவர்களின் தவறு"என அமைச்சர் மா சுப்பிரமணியன் மேடையில் பேசியுள்ளார்.
இது வரை நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டபடும் வீடுகள் 270 சதுர அடி மட்டுமே இருந்த நிலையில் இவர்களுக்கு 420 சதுர அடி அளவில் வீடுகள் கட்டி தரப்படும் என்றும் அப்பாவு நகர் , சுப்பு பிள்ளை தோட்ட பகுதிகளில் 290 குடும்பங்கள் உள்ளது. 420 சதுர அடி வீட்டிற்க்கு 13 லட்சம் செலவில் கட்டபட உள்ளது.அதில் 1.5 லட்சம் மத்திய அரசும்,1.5 லட்சம் பயனர்களும் 10 லட்சம் தமிழ்நாடு அரசும் அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் தெரிந்து கொள்ள /// 60 ஆண்டுகளுக்கு பிறகு காவிரியில் நடந்த நிகழ்வு...!
மேலும், 2015 பெரு வெள்ளத்திற்கு இயற்க்கை காரணம் இல்லை,மனித தவறு என்றும் செம்பரபாக்கம் ஏரியை சரியான நேரத்தில் திறந்து விட்டிருந்தால் மிக பெரிய வெள்ளம் தவிர்த்திருக்கலாம் அப்போது உள்ள அதிகாரிகள் அன்று முதலமைச்சரை சந்திக்க முடியாது, முதலமைச்சரை சந்திக்க நேரம் கிடைக்காததால் அதிகாரிகள் பயந்து ஏரியை திறக்கமால் விட்டு விட்டார்கள் இதற்கெல்லாம் அன்றைய முதலமைச்சர் தான் காரணம் என்றும் 20 ஆயிரம் கன அடி எபெற்று பொய் சொல்லி ஒரே இரவில் ஒரு லட்சம் கன அடி திறந்ததால் சென்னை மூழ்கி போனது.இன்று சிறிய அளவு மழை வந்தால் கூட மக்கள் பயப்படுகிறார்கள் அதற்க்கு காரணம் 2015 தான் 2015 ல் வெள்ளம் ஆண்டவானல் வந்தது அல்ல அன்றைக்கு ஆண்டவர்களால் வந்தது.அது மனித தவறு என்று குற்றம்சாட்டினார்.
பிரியா மரணம் குறித்த கேள்வி;பதில் கூறிய அமைச்சர் :
கால்பந்தாட்ட வீராங்கனை மாணவி பிரியா மரணத்தில் தொடர்புடைய இரண்டு மருத்துவர்களை கைது நடவடிக்கையில் ஈடுபட்டால் டாக்டர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்ததன் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், எவ்வாறு மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று அவர்கள் கருதுகிறார்கலோ அந்த அளவிற்கு அந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பு ஈடுகட்ட முடியாதது. போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளார்கள், மருத்துவர்களிடம் நாங்கள் பேசி கொண்டு இருக்கிறோம்,இனிமேல் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வு நடைபெறுமால் பணியாற்றி வருகிறோம் என்றார்.
தமிழகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் வரும் 23ம் தேதி மிக முக்கிய ஆலோசனை மேற்கொள்ள பட உள்ளது.மேலும், கால் பந்து வீராங்கனை பிரியாவிற்கு மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சையில் தவறில்லை,(compression band) என்று சொல்ல கூடிய கட்டு போட பட்டது, அதை உடனடியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் அகற்ற வேண்டும் ஆனால் அப்படி செய்யாமல் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள் இந்த விவகாரம் அது கொலை குற்றமா என்பது எல்லாம் சட்டம் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் தெரிந்து கொள்ள /// நீதிக்கட்சி தினம் - நெகிழ்வுடன் நினைவுகூர்ந்த முதலமைச்சர்...!