"கவர்னரிடம் உட்கார்ந்து பேசுவது நல்லது" தமிழிசை அறிவுரை!

"கவர்னரிடம் உட்கார்ந்து பேசுவது நல்லது" தமிழிசை அறிவுரை!
Published on
Updated on
1 min read

உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் என டெல்லி வரை செல்வதை விட கவர்னரிடம் உட்கார்ந்து பேசுவது மக்கள் நலனுக்கு சிறந்தது என புதுச்சேரி கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டியளித்துள்ளார். 

புதுச்சேரி கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கையில்,  "தெலுங்கானாவில் என்ன நடக்க வேண்டுமோ அது சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. கேள்வி எழுப்பியவர்கள் அதை நேரில் சென்று பார்க்க சொல்லுங்கள். என்னுடைய சொந்த மாநிலத்தில் ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையில் மோதல் இருப்பதால் நீங்கள் உட்கார்ந்து பேசுங்கள் எனக் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது" எனக் கூறினார்.  

சிலர் இதென்ன குடும்பமா அமர்ந்து பேசுவதற்கு எனக் கூறுகிறார்கள். தமிழ்நாடு குடும்பம் தானே அதை பேசி தானே ஆகவேண்டும். வழக்குகள், விவாதங்கள் என டெல்லி வரை செல்வதை விட உட்கார்ந்து பேசுவது நல்லது என கூறுகிறேன். அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் பேசட்டும்.


பல்கலைக் கழக வேந்தர்களாக முதலமைச்சர் இருந்தால்தான் சிறப்பாக இருக்கும் நிதி ஒடுக்க முடியும் எனக் கூறியது குறித்து கேட்டபோது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் வேந்தராக இருக்க வேண்டும் என கூறிய போது திமுக தான் எதிர்த்தது. தற்போது முதலமைச்சர், ஒரு குறிப்பிட்ட நிதியை அறிவித்துவிட்டு நாங்கள் வேந்தராக இருந்தால்தான் இப்படிப்பட்ட உதவிகளை செய்ய முடியும் என கூறுகிறார். இப்பொழுதும் பல்கலைக்கழகங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் தான் நிர்வாகித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிர்வகித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது பல்கலைக்கழகங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது நாங்கள் வேந்தராக இருந்தால் தான் உதவி செய்வோம் எனக் கூறுவது தவறு எனக்  கூறினார். 

மேலும், மத்திய, மாநில அரசுகள் தான் பல்கலைக்கழகங்களை நடத்துகிறார்கள். அது மட்டும் இல்லாமல் முதலமைச்சர் வேந்தராக இருந்தால் மாவட்ட செயலாளராக இருக்கும் ஒரு அரசியல்வாதியை துணை வேந்தர்களாக ஆக்குவீர்கள். அதன் பிறகு அவர்கள் ஊழல் செய்ய ஆரம்பிப்பார்கள். அதனால் வேந்தர் பதவியில் கவர்னர் இருப்பதுதான் சரி. இல்லை என்றால் பல்கலைக்கழகங்கள் மீது முழுவதுமாக அரசியல் சாயம் பூசப்பட்டுவிடும். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com