மருத்துவ துறையில் ரூ.4.29 கோடி இழப்பை ஏற்படுத்திய அதிமுக... அம்பலப்படுத்திய இந்திய தணிக்கைத்துறை...

அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு காரணங்களால் மருத்துவ துறையில் 4 கோடியே 29 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது அம்பலம் ஆகியுள்ளது.
மருத்துவ துறையில் ரூ.4.29 கோடி இழப்பை ஏற்படுத்திய அதிமுக... அம்பலப்படுத்திய இந்திய தணிக்கைத்துறை...
Published on
Updated on
1 min read
இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை அறிக்கையின்படி, 7 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்காக முறையற்ற வகையிலும், உரிய கவனமின்றியும் கொள்முதல் செய்யப்பட்ட கருவிகள் மூலம் 4 கோடியே 29 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்குவதற்கு ஆண்டு தோறும் 78 கோடி ரூபாய் வரை மருத்துவ கல்வி இயக்குநர் செலவு செய்வதாக சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது
அந்த வகையில் டெங்கு, HINI, எபோலோ போன்ற தொற்று நோய்கள் பரவும் காலங்களில் தடுப்பு சிகிச்சைக்காக எங்கும் எடுத்து செல்லும் வசதியுடன், 5 வகையான ஆய்வுக்கூட கருவிகளை 10 கோடியே 60 லட்ச ரூபாய் செலவில் DME வாங்கி விநியோகம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், மருத்துவ கருவிகள் மற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்வதில், ஒவ்வொரு முறையும் 10 லட்ச ரூபாய் செலவிடுவதற்கான நிதி அதிகாரம் DME-க்கு இருப்பதாகவும்,
10 லட்சத்திற்கு மேல் 50 லட்சத்திற்குள் கொள்முதல் செய்யும் நிதி அதிகாரம் மத்திய கொள்முதல் குழு அல்லது உயர் அதிகாரக் குழுவிற்கு உள்ளது என்றும், 50 லட்ச ரூபாய்க்கு மேல் தமிழக அரசு தான் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற விதி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் 10 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 235 ஹீமோக்யூ விரைவு சோதனை கருவிகளை கொள்முதல் செய்ய, கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மருத்துவ கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 மருத்துவமனைக்கு கருவிகள் வழங்கியதில் சென்னை, சேலம்,மதுரை, தருமபுரி உள்ளிட்ட 7 மருத்துவ கல்லூரியில் 2018-ம் ஆண்டு வரை கருவி பயன்படுத்தப்படவில்லை என இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொள்முதல் ஒப்புதல் 10 லட்சம் வரை அளிப்பதற்கு மட்டுமே, மருத்து கல்வி இயக்குநருக்கு அதிகாரம் இருக்கும் நிலையில், 10 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள கருவிகளின் கொள்முதலுக்கு ஒப்புதல் வழங்கியதன் மூலம் அதிகாரத்தை அவர் மீறியுள்ளார்.
அத்துடன் 4 கோடியே 29 லட்ச ரூபாய் தவிர்த்திருக்கக்கூடிய செலவினம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com