தமிழ்நாட்டில் 5,884 ரேஷன் கடைகளுக்கு ISO தரச்சான்று - கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

தமிழ்நாட்டில் 5,884 ரேஷன் கடைகளுக்கு ISO தரச்சான்று - கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

Published on

தமிழ்நாட்டில் 5,884 ரேஷன் கடைகளுக்கு  ஐஎஸ்ஓ தரச் சான்று பெறப்பட்டுள்ளது என கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொிவித்துள்ளாா். 

திருவண்ணாமலையில் உள்ள நியாய விலை (ரேஷன்) கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர்  செய்தியாளா்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் முக்கிய துறைகளில் ஒன்றாக கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருவதாகவும், கூட்டுறவுத் துறையில் வேளாண் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், வேளாண் கடனாக கடந்த ஆண்டில் மட்டும் 17.44 லட்சம் பேருக்கு 13,442 கோடி ரூபாய்  வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசியவர், 5 ஆயிரத்து 884 ரேஷன் கடைகளுக்கு  ஐஎஸ்ஓ தரச் சான்று பெறப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு 3876 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 35.29 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 4.36 லட்சம் விவசாயிகளுக்கு 7191.54 கோடி ரூபாய் பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com