நாடு முழுவதும் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
மிழகம் முழுவதும் மொத்தமுள்ள 63 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச் சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.அதன்படி, தமிழ்நாட்டில் 26 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்த சுங்கச் சாவடியில் பாஸ்ட் ட்ராக் ஸ்கேன் சரியான முறையில் செயல்படாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முறையான பராமரிப்பு இல்லாத நெடுஞ்சாலைக்கு கட்டண உயர்வு தேவையா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிக்க : I.N.D.I.A. கூட்டணியின் இலச்சினை இன்று வெளியீடு!!
இதேபோல், திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை சுங்கச் சாவடியிலும் சுங்கக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வு மேலும் சுமையை உருவாக்கியுள்ளதாக வாகன உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
மதுரை அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச் சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சுங்ககட்டண உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என வாகன ஓட்டிகளும் லாரி உரிமையாளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.