மருத்துவப் படிப்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்கெனவே 7.5% உள் ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது.
இந்நிலையில், மருத்துவ படிப்புகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 4:30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.