உயர்நிலை மேல்நிலை மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்டங்களை TNSED App -ல் பதிய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

உயர்நிலை மேல்நிலை மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்டங்களை TNSED App -ல் பதிய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
Published on
Updated on
1 min read

மாணவர்களுக்கு விலையில்ல நலத்திட்டங்கள்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு 2022 - 2023 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா புத்தகப்பை, விலையில்லா சீருடைகள், புவியியல் வரைபடப் புத்தகம், விலையில்லா வண்ணப் பென்சில் அல்லது வண்ணக் கிரையான்கள், கணித உபகரணப் பெட்டி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

TNSED Schools App-ல் Login

இந்த நலத்திட்டங்களில் என்னெனன்ன மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது? எவ்வளவு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது? விவரத்தினை, பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக தங்களின் 8 digit Teacher id பயன்படுத்தி TNSED Schools App-ல் Login செய்து Schemes Menu -வை பயன்படுத்தி நலத்திட்டங்கள் விநியோகித்த விவரங்களை பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் வலியுறுத்தல்

மேலும், இதற்கு உரிய அறிவுறுத்தல்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் வலியுறுத்த வேண்டும் எனவும் தொழிற்கல்வி இணை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com