12 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவிலான சிறுபான்மையினர் மாணவர் விடுதிக் கட்டடம் திறப்பு!

12 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவிலான சிறுபான்மையினர் மாணவர் விடுதிக் கட்டடம் திறப்பு!
Published on
Updated on
1 min read

சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 


பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 12 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிக் கட்டடங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். 

இதேபோன்று, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனம், செங்கல்பட்டு மாவட்டத்தில், உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கோத்ரேஜ் குழுமத்தினர் கையெழுத்திட்டனர். 515 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள இந்நிறுவனத்தின் மூலம் 446 நபர்களுக்கு வேலை  வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com