பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட இளையராஜா.. ஏ.ஆர். ரகுமான்  

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு பாடநூல் வாரியத்தின் பாடத்திட்டம் 2018 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.
பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட இளையராஜா.. ஏ.ஆர். ரகுமான்   
Published on
Updated on
1 min read

 தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு பாடநூல் வாரியத்தின் பாடத்திட்டம் 2018 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் பாடத்திட்டம் பொதுத்தமிழ் என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டது.

இதில் இசைத்தமிழர் இருவர் என்ற பாடத்திட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள் ஏ ஆர் ரகுமான் மற்றும் இளையராஜாவைப் பற்றி பாடத்திட்டம் அமைந்திருக்கிறது. அது ஏ ஆர் ரகுமானை ஆஸ்கர் தமிழர் என்றும் இளையராஜாவை சிம்பனி தமிழர் என்றும் பெயர் வைத்து அவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக பாடத்திட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இது பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டிலிருந்து பாட புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com