சுற்றறிக்கையின் படி நடந்து கொள்ளவில்லை எனில்... உத்தரவிட்ட போக்குவரத்து துறை!!

சுற்றறிக்கையின் படி நடந்து கொள்ளவில்லை எனில்... உத்தரவிட்ட போக்குவரத்து துறை!!
Published on
Updated on
1 min read

பேருந்துகளில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், கடத்தல் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அனுமதிக்க கூடாது  என போக்குவரத்துத்துறை உத்தரவவிட்டுள்ளது.

மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சாதாரண விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் நடத்துநர்கள் பயணிகள் கொண்டு வரும் சுமைகளுக்கு சுமை கட்டணம் வசூலிப்பது குறித்த விதிமுறைகளை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.  அதாவது பேருந்துகளில் ஒரு பயணி ஐந்து கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம் எனக் கூறியுள்ளது.

அதனோடு 5 கிலோ முதல் 20 கிலோ வரை எடையுள்ள பொருட்களுக்கு சுமை கட்டணமாக ரூபாய் பத்து அல்லது ஒரு பயணிக்கான பயண கட்டணம் எது அதிகமோ அதனை கட்டணமாக  வரிசூலிக்க வேண்டும்  எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.  மேலும் பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை அனுமதிக்க கூடாது எனவும் பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் அனுமதிக்க கூடாது எனவும் அறிவித்துள்ளது.

செய்தித்தாள்கள் மற்றும் தபால்களைக் கொண்டு செல்ல முன் அனுமதி பெற வேண்டும் எனக் கூறியுள்ள போக்குவரத்துத்துறை இந்த சுற்றறிக்கையின் படி நடந்து கொள்ளவில்லை எனில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com