நிரந்தர பணிகளை அவுட்சோர்சிங் முறைக்கு வழங்குவது எதிர்ப்பு , ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேரணியாக சென்று முதலமைச்சரிடம் மனு அளிக்கவுள்ளனர்.
நிரந்தரமான பணிகளை அவுட்சோர்சிங் முறைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பேரணி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த கோரிக்கைகை மனுவில், மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது தான் பெரும் கோரிக்கையாக இருக்கிறது. இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று முதலமைச்சரிடம் மனு அளிக்க திட்டம் என ஊழியர்கள் அறிக்கை விட்டிருந்தனர்.
இந்நிலையில், நாளை பணிக்கு வராத மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும், நாளை பணிக்கு வந்தோர், வராதோர் விவரங்களை காலை 10.45 மணிக்குள் வழங்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேலும் படிக்க | நிவாரணம் வழங்கக்கோரி மனு கொடுத்த விவசாயிகள்...