”நாடாளுமன்ற தோ்தலில் மாற்றம் ஏற்படுத்தினால் நீட் தோ்வை ரத்து செய்யலாம்" - அப்பாவு

”நாடாளுமன்ற தோ்தலில் மாற்றம் ஏற்படுத்தினால் நீட் தோ்வை ரத்து செய்யலாம்" - அப்பாவு
Published on
Updated on
1 min read

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தினால் நீட் தேர்வை ரத்து செய்யலாம் என சட்டப்பேரவை தலைவா் அப்பாவு தொிவித்துள்ளாா். 

தூத்துக்குடி கந்தசாமிபுரத்தில் உள்ள புனித அன்னாள் செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பங்கேற்று 90 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பாராட்டினாா். 

தொடா்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவா், நாட்டிலேயே ஜிஎஸ்டியில் அதிக வசூல் செய்து கொடுக்க கூடிய மாநிலத்தில் தமிழ்நாடு  2-வது இடத்தில் உள்ளது என்றார். ஆனால், இது பிடிக்காத சிலர் நீட் தேர்வினை கொண்டு வந்து நமது கல்விகொள்கையை சீர்குழைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான், தமிழ்நாடு முதலமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கடுமையாக போராடுகின்றனர். எனவே, முதலமைச்சர் சொல்வதுபோல் நாடாளுமன்ற தேர்தலில் ஒருமாற்றத்தை ஏற்படுத்தினால் அடுத்த நொடியே நீட் தேர்வை ரத்து செய்யலாம் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com