ஒரு தொடக்கமாக இருக்கும் என நான் கருதுகிறேன்....பிடிஆர்!!

ஒரு தொடக்கமாக இருக்கும் என நான் கருதுகிறேன்....பிடிஆர்!!
Published on
Updated on
1 min read

புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வந்து தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முதலமைச்சர் மிகுந்த கவனம் செலுத்துகிறார் என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.

திறன் மேம்பாட்டு உச்சி மாநாடு:

சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்மய சேவைகள் துறை சார்பில் நடைபெற்று வரும் தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டில் நித அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  முன்னதாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் சார்ப்பில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தார். 

புதிய தொடக்கம்:

இவ்விழாவில் உரையாற்றிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவது ஒரு புதிய தொழில் வளர்ச்சிக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஒரு தொடக்கமாக இருக்கும் என நான் கருதுகிறேன் எனவும் சர்வதேச மற்றும் இந்தியாவில் உள்ள நிறுவனத்தின் அலுவலர்கள்  இந்த மாநாட்டில் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை எடுத்துரைப்பதும் அவர்களுடன் கைகோர்த்து புதிய தொடக்கத்திற்கு வழிவகுக்க  தமிழ்நாடு அரசுக்கு மிக உதவியாக இருக்கும் எனவும் பேசியுள்ளார்.

அதிவேக வளர்ச்சி:

மேலும் பொருளாதார வளர்ச்சியும்  சமூக வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று வேகமாக வளர்ந்து வருகிறது எனவும் 30 வருடங்கள்  முன்பு வரை  என் வாழ்க்கையில் நான் பார்த்தது 1980 அன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி எனவும் அது மிக குறைவாக இருந்ததாகவும் தற்போது அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும் கூறியுள்ளார். 

ஒரு ட்ரில்லியன்  பொருளாதாரம்:

தொடர்ந்து பேசிய அவர் புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வந்து தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முதலமைச்சர் மிகுந்த கவனம் செலுத்துகிறார் எனவும் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைய வேண்டும் எனவும் அதை நோக்கி தான் தமிழ்நாடு  முன்னேறிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, படித்த இளைஞர்களை தொழில் மற்றும் வர்த்தகத்தில் உடனடியாக திறன் மிகுந்தவர்கள்  மற்றும் தொழில் முனைவோர்களாக மாற்றுவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் பேசியுள்ளார்.

பல தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கு  உள்ளது என்றும் தமிழ்நாடு அரசு திறன் மிகுந்த நபர்களை  உருவாக்க கவனம் செலுத்தி வருகிறது எனவும் புதிய தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்த அரசு முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com