சட்டசபையில் யார் யாருக்கு எங்க இடம் ஒதுக்க வேண்டும் என எனக்கு தெரியும் - அப்பாவு

சட்டசபையில் யார் யாருக்கு எங்க இடம் ஒதுக்க வேண்டும் என எனக்கு தெரியும் - அப்பாவு
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் சலசலப்பின்றி நடத்தப்படும் சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் இருக்கை விவகாரம் முடிவு பெற்று விட்டது சட்டசபையில் யார் யாருக்கு எங்கு இருக்கைகள் ஒதுக்க வேண்டும் என்பது எனது உரிமை என்று நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

தொழில் வளர்ச்சி கருத்தரங்கம்

நெல்லை பாளையங்கோட்டை பிரான்சிஸ் சேவியர் கல்லூரி மற்றும் தமிழ்நாடு சிறு குறு மற்றும் கிராமிய தொழில் முனைவோர்கள் சங்கம் இணைந்து நடத்தும் சிறுதானிய மாநாடு மற்றும் தொழில் வளர்ச்சி கருத்தரங்கம் பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் இன்று தொடங்கியது தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த கருத்தரங்கு மற்றும் சிறு தானிய பொருட்களின் கண்காட்சியை தொடங்கி வைத்தார் கண்காட்சியில் நெல் விதைகள் உள்பட  பல்வேறு வகையான சிறு தானியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது மேலும் சிறு தானிய உணவுகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் சபாநாயகர் அப்பாவு உரையாற்றினார்.

எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் 

நிகழ்ச்சிக்கு பிறகு சபாநாயகர் அப்பாவு  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிற இந்த முறை எந்தவித சலசலப்புகளும் இல்லாத அளவுக்கு பேரவை நடைபெறும் மேலும் மக்களின் கோரிக்கைகள் குறித்த பேச அனைத்து உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் சட்டசபையில் நிறைவு பெற்று விட்டது அவர்களே அதை பற்றி பேசாதபோது நீங்கள் தான் வடிவேலு பாணியில் உசுப்பேத்தி விடுகிறீர்கள் சட்டசபையில் எங்கு யாருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது எனது உரிமை அவரவருக்கு எங்கு ஒதுக்க வேண்டுமோ அங்கு இருக்கைகள் ஒதுக்கி விட்டேன்.

ஜனநாயக மரபு 

அதில் இருந்து அவர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும் ராதாபுரம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை 96 ஓட்டுகளில் தோற்று விட்டு மக்கள் வரிப்பணத்தில் பென்சின் வாங்கி கொண்டிருக்கிறார் நீதிமன்றமே அவர் 96 வாக்கு வித்தியாசத்தில் தோற்று விட்டதாக தெரிவித்து விட்டது ஜனநயாக மரபு பற்றி அவர் பேச வேண்டுமென்றால் அவர் வகித்த பதவியை ராஜினாமா செய்து விட்டு பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com