எடப்பாடி பழனிச்சாமி மந்திரிகளை அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றார், ஆனால் எதையும் செயல்படுத்தவில்லை - அமைச்சர் கே என் நேரு குற்றச்சாட்டு.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ஒன்பது புள்ளி 90 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாநகராட்சி மாதிரி உயர்நிலைப்பள்ளி கட்டிட கட்டுமான பணிகளை பூமி பூஜை செய்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு இன்று துவங்கி வைத்தார்
அதனைத் தொடர்ந்து திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்..,
" மாநகராட்சி பள்ளி 9 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் ஆயிரம் குழந்தைகள் படிக்கும் அளவிற்கு டெல்லி மாடல் பள்ளி போன்று கட்டப்பட உள்ளது. அதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஜனவரி அல்லது நவம்பர் மாதத்திற்குள் திறக்கப்பட உள்ளது. அரிஸ்டோ மேம்பாலம் 29ஆம் தேதி காலை திறக்கப்பட உள்ளது ".
" பாதாள சாக்கடை பொருத்தவரை அந்த காலத்தில்(ஆட்சியில்) காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆள் பற்றாக்குறை என காரணம் கூறுகின்றனர், புது காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டால் விலை கூடுதலாக ஆகிவிடும், இதனால் வேலையும் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் பாதாள சாக்கடை பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த வருடம் காவிரி புது பாலம் பணி துவங்க உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்காவிற்கு மந்திரிகளை அழைத்து சென்றார். ஆனால் எந்த ஒப்பந்தங்களையும் செயல்படுத்தவில்லை ".
" திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் 500 பேருந்துகள் நிறுத்த வசதி ஏற்படப்பட்டுள்ளது செய்யப்பட்டுள்ளது கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம் காவல் நிலையம் வியாபாரிகளுக்கு கடைகள் மற்றும் இதன் அருகே 500 கோடி செலவில் ஐடி பார்க் அமைய உள்ளது ".
" தமிழக முதல்வர் வெளிநாட்டில் தொழில் துறையோடு ஒப்பந்தம் போடப்பட்டு இரண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முதலீடு எடுக்கப்பட்டுள்ளது. நேற்று சிங்கப்பூரில் 6 ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது மேலும் ஜப்பானில் தொழில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. வேலை செய்தால் அவர்களுக்கு என்ன..? எங்கு இருந்தாலும் குறை கூறுவார்கள் அங்கு சென்றாலும் குறை கூறுவார்கள் ஏனென்றால் (அவன் எல்லாம்) அவர்கள் எதிர்க்கட்சி. எப்படி அவர்கள் பாராட்டுவார்களா.? திட்ட தான் தான் செய்வார்கள் ".
" நல்லது செய்வதற்காகத்தான் முதல்வர் வெளிநாடு சென்று உள்ளார் அதிகாரிகளை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் முதலில் உங்களுடைய முதுவை திரும்பிப் பாருங்கள் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று. நாடாளுமன்ற கட்டிடத்தை பொறுத்தவரை முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார் அதற்கு கண்டனம் என்றால் என்ன செய்வது.? " என கூறினார்.