அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து விளக்கம் பெற விரும்பும் மக்கள், கொடுக்கப்பட்டுள்ள உதவி மைய எண்களை தொடர்புகொள்ளலாம் என அறிவித்துள்ளார் ஆட்சியர் ஆஷா அஜித்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளான நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்டது. முன்னதாக, நேற்று முன் தினமே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பணம் 1000 ரூபாய் சில பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாதவர்கள் அடுத்த மூன்று மாத அவகாசத்தில் மீண்டும் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து விளக்கம் பெற விரும்பும் பொதுமக்கள், கொடுக்கப்பட்டுள்ள உதவி மைய எண்களுக்கு அழைத்து பேசலாம் என அறிவித்துள்ளார் சிவகங்கை ஆட்சியர் ஆஷா அஜித்.
அதன் படி,
*கலெக்டர் அலுவலகம்- 7845145001,
*சிவகங்கை கோட்டாட்சியர்- 7845738002,
*தேவகோட்டை கோட்டாட்சியர் - 7845014004,
*சிவகங்கை தாசில்தார்- 8438856008,
*மானாமதுரை தாசில்தார்- 8925786003,
*காளையார் கோவில் தாசில்தார்- 8438957006,
*திருப்புவனம் தாசில்தார் - 8925664001,
*இளையான்குடி தாசில்தார்- 9042317001,
*திருப்புத்தூர் தாசில்தார்- 8925078921,
*காரைக்குடி தாசில்தார்- 8807378005,
*தேவகோட்டை தாசில்தார்- 8870362101,
*சிங்கம்புணரி தாசில்தார் - 8122576001
மேற்காண்ட தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு, உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.