வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி...துவங்கி வைத்த மா.சுப்பிரமணியன்!

வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி...துவங்கி வைத்த மா.சுப்பிரமணியன்!
Published on
Updated on
1 min read

குறுகிய மனநிலை கொண்ட வணிகர்கள் சிலர் உடனடியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பழங்களில் ரசாயனங்களை பயன்படுத்துகிறார்கள் என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பழக்கடைகளில் ரசாயனங்களை பயன்படுத்துகிறார்கள் என்று பொதுமக்களுக்கு சந்தேகம் வந்தால் உணவு பாதுகாப்புத் துறையின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்  என்று கூறினார்.

வரும் நாட்களில் உயர்வெப்ப தாக்கத்தின் காரணமாக தீவிர தலைவலி, மயக்கம், தசைப்பிடிப்பு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் உயர் வெப்ப நிலையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்,  காலை 11 மணி முதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், மதுபானங்கள், டீ, காபி, கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வலியுறுத்தினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com