கைக்குள்ளேயே.... வரலாறும் போராட்டமும்.... பெண்களுக்கு பின்னால்.....

கைக்குள்ளேயே.... வரலாறும் போராட்டமும்.... பெண்களுக்கு பின்னால்.....
Published on
Updated on
1 min read

பெரியாரின் வழியில் செயல்படும் திமுக அரசு பெண்களுக்கான உரிமையை அதிகமாக வழங்கி வருகிறது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். 

வரலாறும் போராட்டமும்..:

காலம் காலமாக பெண்கல்வி ஒடுக்குமுறை இருந்தது.  பெண்களுக்கு கல்வி கிடையாது என உலகமே ஒன்றிணைந்து நின்றது.  பெண்கள் அனைத்து உரிமைகளை போராடி பெற்றுள்ளோம், இங்கு பட்டம்பெறும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னால் ஒரு வரலாறும், போராட்டமும் உள்ளது.  ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து நீங்கள் பட்டம்பெறுவது எதிர்வரும் சந்ததியினருக்கு முன்னுதாரணமாக இருக்கும்

பெண்ணுரிமை:

பெண்களுக்கு நியாயங்கள் கிடைப்பதில்லை , முடிவு எடுக்கும் நிலை முழுமைபெறவில்லை, என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்கிறார்.  பெண்ணுரிமை குறித்து பேசுபவர்கள் சிலர் எல்கை வைத்து கொள்வார்கள்.  பெண் கல்வியை குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து தரவும், வேலைக்கு செல்லவும் என கூறுகிறார்கள்

பெண்களுக்காக...:

பெண்களுக்கான வாழ்வியல் வரையரை கருத்தியலை உடைத்தெறிந்தவர் தந்தை பெரியார்.  பெரியாரின் வழியில் செயல்படும் திமுக பெண்களுக்கான உரிமையை அதிகமாக வழங்கிவருகிறது.  கலைஞரின் ஆட்சியில் அரசு வேலையில் பெண்களுக்கான 30சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது ஸ்டாலின் ஆட்சியில் 40சதவிதமாக அதிகரித்துள்ளோம்.

பெண்களுக்கு பின்னால்:

பெண் உனக்கு எது சரியோ அதை செய் உனது கனவை தடையை உடைத்து நிறைவேற்று என்றார் பெரியார்.  திராவிட இயக்கம் பெண்கல்விக்காவும், பெண் வேலைவாய்ப்புக்காகவும் பின்னால் நிற்கிறது.  சிலர் இருக்கிறார் ஒரு பெண் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் போது ஏன் செல்போன் வைத்திருந்தாள், வெளியில் போனாள் என கேட்கும் கருத்தியல் உடையவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

எதிர்கால சந்ததியினர்:

அன்பு, கலாச்சாரம், பண்பாடு என கூறி பெண் உரிமை பத்திரத்தை பிடுங்கி செல்வார்கள் எனவே அவர்களிடம் கவனமாக இருக்கவேண்டும்.  தவறுகளை கடந்துவந்த நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம், உங்கள் மற்றும் உங்களின் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்.

கைக்குள்ளேயே:

கல்வியில் முதன்மையாக வருபவர்கள் சமூக கட்டங்களால் குறுகிய எல்கையில் இருப்பார்கள்.  கல்வி அறிவு தான் சக்தி வாய்ந்தது. ஒருவர் மற்றொருவரை விட திறமையாக இருக்கிறோம்.  பெண்கள் கைகளில் செல்போன் இருப்பதால் அனைத்து செய்திகளும் கைகுள்ளேயே கிடைக்கின்றது.

பங்கேற்றவர்கள்:

மதுரை யாதவா பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அதியோர் கலந்து கொண்டனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  கள ஆய்வில் முதலமைச்சர்...... தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்......

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com