"கோசாலை நிலத்தில், சிப்காட் நிறுவனம் அமைக்க, சேகர் பாபு முயற்சி" எச்.ராஜா பரபரப்பு பேச்சு!

"கோசாலை நிலத்தில், சிப்காட் நிறுவனம் அமைக்க, சேகர் பாபு முயற்சி" எச்.ராஜா பரபரப்பு பேச்சு!
Published on
Updated on
1 min read

பழநியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசு இன்னும் சில நாட்களில் கலைக்கப்படலாம் என பாஜக-வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, "பழனி மலைக்கோவிலில் இந்து அல்லாதோர் நுழைவது என்பது சட்டவிரோதம் என்றும், தமிழக அரசுதான் மதசார்பற்றதே தவிர, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை என்பது மத சார்புடையதுதான் என்றும், இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து மதம் மற்றும் பண்பாட்டை பரப்பக்கூடிய செயலை செய்யவேண்டும். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர் பாபு, இந்து மதத்திற்கு எதிரான அனைத்து பணிகளையும் செய்துவருகிறார்" எனக் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், "பழனி அருகே கள்ளிமந்தையம் பகுதியில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் உள்ள பசுக்கள் பராமரிப்பின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது என்றும், பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களில் பல மாடுகளை  கேரளாவிற்கு அடிமாட்டிற்கு அனுப்பப்புவதாகவும், பசுக்களை இல்லாமல் செய்துவிட்டு, 288ஏக்கரில் அமைந்துள்ள கோசாலை நிலத்தை சிப்காட் நிறுவனம் அமைக்க சேகர் பாபு முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், முதல்வருக்கு தங்களது குடும்பத்தில் எப்போது சிபிஜ நுழையுமோ? என்ற அச்சமும், முதல்வர் குடும்பத்தில் துர்கா ஸ்டாலின் தவிர மற்ற அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்பதால், சிபிஜ தமிழகத்திற்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்திருப்பது ஆகியவை எல்லாம் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தெளிவாக விளக்குகிறது என்றும், சாடியுள்ளார்.

மேலும், "திமுக ஆட்சி இன்னும் ஓரிரு வாரத்தில் கலைக்கப்படலாம் என்றும், மிகப்பெரிய குற்றம் செய்த அமலச்சரை காப்பாற்ற முயல்வதும், 38நாட்களாக ஒரு அமைச்சரை மருத்துவமனையில் வைத்துள்ளதும், அவருக்கு  என்ன ஆனது என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத அளவில் மறைத்து வைத்துள்ளது ஏன்" என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com