தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் குரூப்-2 தேர்வு.. தாமதமாக வந்தால் என்ன நடக்கும்?.. தேர்வு எழுதும் விதிகள் என்ன?

தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் குரூப்-2 தேர்வு.. தாமதமாக வந்தால் என்ன நடக்கும்?.. தேர்வு எழுதும் விதிகள் என்ன?
Published on
Updated on
1 min read

எழுத்தர், கணக்காளர்,  இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 48 வகையான பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுகள் எதுவும் நடைபெறாத நிலையில் நிகழாண்டு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  தமிழகத்தில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 529 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் தேர்வெழுத விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் தேர்வு எழுதும் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேர்வுகள் காலை 9 முப்பது மணிக்கு துவங்க உள்ள நிலையில் தேர்வர்கள் எட்டு முப்பது மணிக்குள் தேர்வறைக்குள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாமதமாக வருபவர்கள் நிச்சயம் அனுமதிக்கபட மாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தேர்வு எழுத வருபவர்கள் அனுமதி சீட்டுடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்துவர வேண்டும் என்றும், கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com