”அரசின் சேவைகள் விரைந்து மக்களை சென்றடைய வேண்டும்” அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை!

”அரசின் சேவைகள் விரைந்து மக்களை சென்றடைய வேண்டும்” அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை!
Published on
Updated on
1 min read

அரசின் சேவைகள் விரைந்து மக்களை சென்றடைய வேண்டுமென அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

”உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் ”உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டம் குறித்தும், திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனையடுத்து ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், மக்களின் அன்றாட தேவைகள், திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டியது அவசியம் எனவும் அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தினார்.

அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து மக்களை சென்றடைய வேண்டும் என கூறிய முதலமைச்சர், இதுவரை 86 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், பட்டா மேல் முறையீடுகள் மீது அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். மக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டால் தான் அரசு முறையாக பணியாற்றியதாக கருதப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

பணமோசடி, நிலமோசடி என காவல்துறைக்கு அதிகளவில் புகார்கள் வருவதாகவும், இந்த வழக்குகளில் மக்களுக்கு வீண் அலைக்கழிப்புகளை ஏற்படுத்தக்கூடாது எனவும்  அறிவுறுத்தினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com