அரசு ஓட்டுநர்கள்..!  2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை கட்டாயம்...!!

அரசு ஓட்டுநர்கள்..!  2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை கட்டாயம்...!!
Published on
Updated on
1 min read

அரசு ஓட்டுநர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேணடுமென தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு,  கண்பரிசோதனை, காது பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 50 வயதுக்கு குறைவான ஓட்டுநர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை  கண், காது மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமெனவும், 50 வயதுக்கு அதிகமான ஓட்டுநர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண், காது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்காக சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் இலவசமாக மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படும் என கூறியுள்ள அவ்வறிக்கை ஒருவேளை மருத்துவர்கள் ஓட்டுநர்களை பரிசோதித்து தகுதியற்றவர்கள் என தெரியவந்தால் அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. கண், காது மருத்துவ பரிசோதனையில் தகுதியற்றவர்களாக கண்டறியப்படுபவர்கள் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளில் அதே சம்பளத்தில் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com