கோபிசெட்டிபாளையம் : ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான வாழைத்தார்...விவசாயிகள் மகிழ்ச்சி...!

கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இன்று நடைபெற்ற வாழைதார் ஏலத்தில் ஆடிபெருக்கையொட்டி அதிக விலைக்கு வாழைதார்கள் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் : ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான வாழைத்தார்...விவசாயிகள் மகிழ்ச்சி...!
Published on
Updated on
1 min read

கோபிசெட்டிபாளையம்  வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இன்று நடைபெற்ற வாழைதார் ஏலத்தில் ஆடிபெருக்கையொட்டி  அதிக விலைக்கு வாழைதார்கள் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கோபிசெட்டிபாளையம் பகுதியில் நெல்,கரும்பு மற்றும் வாழை சாகுபடியில் கதளி, நேந்திரன், பூவன், ரஸ்தாளி, தேன்வாழை, செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்

வாழை சாகுபடியில் விவசாயிகள்,தாங்கள் அறுவடை செய்த வாழைதார்களை கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், வாரம் இருநாட்கள்  நடைபெறும் ஏல விற்பனையில் கலந்து கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று நடைபெற்ற வாழைதார் ஏல விற்பனையில் 4800க்கும் மேற்பட்ட வாழைதார்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஏலத்தில் திருப்பூர், கோவை, பழனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். வருகிற 3ம் தேதி ஆடிபெருக்கு நாள் என்பதால் வழிபாட்டு தளங்களில் வாழைபழத்தின் தேவை அதிகரிக்கும் என்பதால் ஏல விற்பனையில் வாழைதார்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர்.

இதில் பூவன்,தேன்வாழை, செவ்வாழைதார்கள் ஒன்று அதிகபட்சமாக ரூ.710 முதல் ரூ.750 வரையில் விற்பனையானது. இதேபோல் கதளி, நேந்திரம் கிலோ ஒன்று ரூ.40 முதல் ரூ.42 ரூபாய் வரைக்கும் ஏலத்தில் விற்பனையானது. ஆடிபெருக்கையொட்டி  இன்று நடைபெற்ற வாழைதார் ஏல  விற்பனையில் எதிர்பார்த்த விலையைவிட கூடுதல் விலைக்கு வாழைகள் விற்பனையானது.
இதனால் 4800 வாழைதார்கள், ரூ.10 லட்சத்து 80ஆயிரத்திற்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com