விமான பயணிகளுக்கு குட் நியூஸ்.. இனிமேல் பரிசோதனை இல்லை - சென்னை விமான நிலைய ஆணையம் அறிவிப்பு

சென்னை விமான நிலையம் வழியாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு Rapid பரிசோதனை முறை நிறுத்தப்பட்டுள்ளதென விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
விமான பயணிகளுக்கு குட் நியூஸ்.. இனிமேல் பரிசோதனை இல்லை - சென்னை விமான நிலைய ஆணையம் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், அபுதாபி போன்ற வளைகுடா நாடுகளுக்கு  வரும் பயணிகள் 6 மணி நேரத்திற்கு முன் Rapid பரிசோதனை செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என துபாய் அரசு அறிவித்தது. இதனையடுத்து கடந்த ஓராண்டாக சென்னை விமான நிலையத்தில் rapid பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்தநிலையில் அந்த பரிசோதனை தேவையில்லை என்றும், ஆனால் வளைகுடா விமான நிலையத்தில் பயணிகள் தங்கி இலவசமாக அந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் எனவும் துபாய் அரசு அறிவித்துள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் Rapid பரிசோதனை மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com