சிவனே -னு போகும் சிவன் பக்தர்களை குறிவைத்து ... சூதாடி பணத்தை பறிக்கும் கும்பல்...!    -பிதாமகன் பட பாணியில் ஒரு பித்தலாட்டம்...!

சிவனே -னு போகும் சிவன் பக்தர்களை குறிவைத்து ... சூதாடி பணத்தை பறிக்கும் கும்பல்...!    -பிதாமகன் பட பாணியில் ஒரு பித்தலாட்டம்...!
Published on
Updated on
1 min read

கோவையில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அவ்வாறிருக்க, இப்பகுதியில் சுற்றித் திரியும் சூதாட்ட கும்பல் ஒன்று மூன்று கேரம் போர்டு ஸ்டைகர்களில் ஒரு ஸ்டைகரில் மட்டும் எதேனும் ஒரு நம்பரை ஒட்டி விட்டு மூன்று ஸ்டைகர் காயின்களையும் மாற்றி மாற்றி சுற்றுகின்றனர். 

பின்னர் எந்த ஸ்டைகரில் நம்பர் உள்ளது என யூகித்து அதன் மீது பணத்தை கட்ட வேண்டும். சரியாகக் கூறினால் கட்டிய பணத்திற்கு இரட்டிப்பாக திருப்பித் தருவதாக ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதில் குறிப்பாக மற்றவர்களை நம்பவைக்க  சூதாட்ட கும்பலை சேர்ந்த ஒருவரே பக்தர் போல் நடித்து முதலில் பணத்தைக் கட்டி வெற்றி பெறுகிறார். 

இதனைப் பார்த்த இதர பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆசைப்பட்டு இந்த விளையாட்டில் பணத்தைக் கட்டி விளையாடுகின்றனர். முதலில் வெற்றி பெற வைத்து விட்டு அதிக பணம் கட்டும் போது ஏமாற்றப்படுகின்றனர். இவர்கள் 'கூகுள் பே', 'போன் பே' போன்ற இணைய வழி மூலமாகவும் பணத்தை செலுத்தும் வசதியையும் வைத்துள்ளனர். தற்போது இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இப்பகுதியில் பல நாட்களாக இந்த சூதாட்டம் நடைபெற்று வருவதாகவும் இதற்கு காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. 

இதையடுத்து, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பக்தர்களை குறி வைத்து நடைபெற்று வரும் சூதாட்டத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com