சென்னையில் நிறைமாதக் கர்ப்பிணி வேட்பாளர் வீடு வீடாகத் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து வருவது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை மாநகராட்சி 167-வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆளும் திமுக வேட்பாளராக துர்கா தேவி போட்டியிடுகிறார்.
நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்னும் ஆறே வாரங்களில் பிரசவம் ஆக உள்ளது. மகப்பேறுக்குத் தயாராகி வரும் நிலையிலும், துர்கா தேவி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருவது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.