”சொந்த பாதுகாப்புக்காக போராடும் நிலைக்கு நிர்பந்தம்” - கேள்வி எழுப்பும் கமல்ஹாசன்!

”சொந்த பாதுகாப்புக்காக போராடும் நிலைக்கு நிர்பந்தம்”  - கேள்வி எழுப்பும் கமல்ஹாசன்!
Published on
Updated on
1 min read

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களின் சொந்த பாதுகாப்புக்காக போராடும் நிலைக்கு அவர்களை நிர்பந்தித்துள்ளோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக 12 அண்டுகளாக பதவி வகிக்கும் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி கடந்த ஜனவரி 18 ஆம் தேதி முதல் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஒரு மாதத்தை எட்டியுள்ளது எனவும், நாட்டை பெருமைபடுத்த போராடுவதற்கு பதிலாக, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்களின் சொந்த பாதுகாப்புக்காக போராடும் நிலைக்கு அவர்களை நிர்பந்தித்துள்ளோம் என  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் சக இந்தியர்களே, நமது கவனத்திற்கு தகுதியானவர் யார், நமது தேசிய விளையாட்டு சின்னங்களா அல்லது ஒரு விரிவான குற்ற வரலாற்றைக் கொண்ட அரசியல்வாதியா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com