வராக நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!

வராக நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 121 அடியை எட்டியதால் வராக நதி கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம்  பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின்  நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் 82 அடியில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

இந்நிலையில் இன்று  முழு கொள்ளளவான 126.28 அடியில் அணையின் நீர் மட்டம் 121 அடியை எட்டி உள்ளதால் பெரியகுளம் பகுதியில் ஓடும் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதி ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறையினர் விடுத்துள்ளனர்.

மேலும் தற்போது சோத்துப்பாறை அணைக்கு நீர் வரத்து 45கன அடியாகவும், நீர் இருப்பு 171.50 மில்லியன் கனாடியாகவும் குடிநீருக்காக 10 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முழு கொள்ளளவு இருக்கும் என அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com