”முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு என்று சொல்லிவிட்டு இப்போது கையெழுத்து இயக்கம் என்பது ஏமாற்று செயல்” - ஜெயக்குமார்

”முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு என்று சொல்லிவிட்டு இப்போது கையெழுத்து  இயக்கம் என்பது ஏமாற்று செயல்” - ஜெயக்குமார்
Published on
Updated on
1 min read

நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் தொடங்கியிருப்பது மக்களை ஏமாற்றக்கூடிய செயல் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

சென்னை ராயபுரத்தில் அதிமுகவின் 52ம் ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற ஏழை  மக்களுக்கு  நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய  ஜெயக்குமார்:-

“திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு சீரழிந்து வருவதாக குற்றம்சாட்டினார்.

தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்த உதயநிதி தற்போது கையெழுத்து இயக்கம் தொடங்கியிருப்பது மக்களை ஏமாற்றக்கூடிய செயல் என்றும் திமுகவின் பொய்யான வாக்குறுதிகளால் பல மாணவர்கள் மரணமடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

செந்தில்பாலாஜி ஜாமின் மனு தள்ளுபடி குறித்து கருத்து தெரிவித்த அவர் நீதிமன்றத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com