நடவுப் பணிக்கு ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் கவலை!

நடவுப் பணிக்கு ஆட்கள் கிடைக்காததால் விவசாயிகள் கவலை!
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில்  நடவுப் பணிக்கு ஆள்கிடைக்காமல் விவசாயிகள்  சிரமப்பட்டு வருகிறார்கள்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே கிராமங்களில் பெய்த மழை நீரை கொண்டு விவசாய பணிகளை விவசாயிகள் துவங்கிய நிலையில் நடவு பணிக்கு ஆட்கள் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஐப்பசி மாதம் பெய்ய வேண்டிய பருவமழை தாமதமாகவே பெய்ய துவங்கிய நிலையில் நீர் நிலைகள் தற்சமயம் நிரம்பிவர துவங்கியுள்ளது. 

இந்நிலையில் சிவகங்கை யை சுற்றியுள்ள விவசாயிகள் தங்களது நீர்நிலைகளில் இருக்க கூடிய நீரை கொண்டு தங்களது விவசாய பணிகளை துவங்கியுள்ளனர். உழவு பணி, விதைப்பு பணி நிறைவடைந்து தற்சமயம் நடவு பணிகளை துவங்கியுள்ளனர். ஆனால் நடவு பணிகளுக்கு ஆள் கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 

குறிப்பாக ஏக்கர் ஒன்றிற்கு நடவு பணி மேற்கொள்ள ரூ3 ஆயிரம் முதல ரூ3 ஆயிரத்து ஐநூறு வரை கூலியாக வழங்கியும் பணிக்கு ஆட்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகிவருகின்றனர். 

100 நாள் வேலை திட்டத்தின் காரணமாகவே வேலைக்கு ஆட்கள் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளதாகவும் விவசாய காலங்களில் 100 நாள் திட்ட பணிகளை தற்காலிகமாக நிறுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com