செய்யாறில் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்கக்கோாி 300-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் மேல்மா சிப்காட் பணிக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த காவல்துறையினர், தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பின்னர், மாலையில் காவல்துறையினர் விடுத்தவித்த பிறகும் அங்கிருந்து செல்ல மறுத்து விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். விளை நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் எனக்கூறி, இரவு நேரத்தில் பெண்கள் உள்ளிட்டோர் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் அவா்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தொிவித்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் உள்ள மேல்மா கூட்டுச்சாலை பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செய்யாறு சார் ஆட்சியர் அனாமிகா விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்று உாிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.