காவிரி டெல்டா பகுதிகளில் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியதால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகளை வழங்கக் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
விவசாயிகள் வேதனை:
பருவம் தவறிப் பெய்த மழையால் தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கியதை அடுத்து விவசாயிகள் வேதனையடைந்தனர்.
கடிதம்:
இந்நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கொள்முதல்:
இதனால், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யவும், முதிர்ச்சியடையாத நெல்லின் வரம்பை 5 சதவீதமாக அதிகரிக்கவும் அனுமதிக்க வேண்டும் என கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோரிக்கை:
சேதமடைந்த நெல்லின் வரம்பை 7 சதவீதம் வரை தளர்த்த அனுமதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 2047ல் வல்லரசாகும் இந்தியா.......