விழாவில் ஜெயலலிதா பெயரை சொன்ன தமிழ் ஆசிரியர்...தகாத வார்த்தையால் திட்டிய திமுக நிர்வாகி...கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்!

விழாவில் ஜெயலலிதா பெயரை சொன்ன தமிழ் ஆசிரியர்...தகாத வார்த்தையால் திட்டிய திமுக நிர்வாகி...கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்!
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அரசு விழாவில் பள்ளி ஆசிாியரை தகாத வாா்த்தையால் பேசிய  திமுக நிா்வாகி மீது உாிய நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளாா். 

செங்கல்பட்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (04.08.2023) அரசு விழாவில் பள்ளி ஆசிரியரை திமுக நிர்வாகி ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டா் பதிவில், புதுப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற  விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் பேசிய அப்பள்ளியின் தமிழ் ஆசிரியை, மாணவ மாணவியர் தங்கள் வீடுகளிலிருந்து பள்ளிக்கு சென்று வர வசதியாக மாண்புமிகு அம்மா அவர்கள் விலையில்லா சைக்கிள் திட்டத்தை துவக்கி வைத்ததாக பேசும்போது, மேடையில் இருந்து திமுக நிர்வாகி சரவணன் ஆவேசமாக எழுந்து தமிழ் ஆசிரியையிடம் இத்திட்டத்தை மறைந்த கருணாநிதி அவர்கள்தான் துவக்கினார் என்றும், “நீ எப்படி மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கியதாக பேசலாம்”என்று அநாகரீகமான வார்த்தைகளுடன் வாக்குவாதம் செய்து ஆசிரியை மிரட்டி உள்ளார். 

முக்கிய விருந்தினர்கள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணக்கர்கள் கலந்து கொண்டுள்ள பொது நிகழ்ச்சியில் முன் உதாரணமாக நடக்க வேண்டிய நிகழ்வில், பெண் ஆசிரியையிடம் திமுக நிர்வாகி சரவணன் ஒழுங்கீணமாக நடந்துகொண்ட இந்நிகழ்வை கடுமையாக கண்டிப்பதோடு, சம்பந்தப்பட்ட நபா் மீது சட்டப்படி உாிய நடவடிக்கை எடுக்கவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com