தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
சிப்காட்:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொடர்ந்து நிதிநிலை அறிக்கையை வாசித்து வரும் நிதியமைச்சர் பிடிஆர் சென்னை, தாம்பரம், அவடி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளில் முக்கியமான பொது இடங்களில் இலவச வைஃபை வசதிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் 420 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படும் சிப்காட் மூலம் 22000 பேருக்கு வாலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.
தொழிற்சாலைகள்:
தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் புதிதாக ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அமைக்கப்படும் எனவும் இதன் மூலம் 32 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில்:
பசுமை மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை இடத்தில் உள்ளது எனவும் கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில் 46 சதவிகிதம் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பதில் பெருமையடைவதாகவும் கூறியுள்ளார் நிதியமைச்சர் பிடிஆர்.