செங்கல்பட்டு, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 39 ஒன்றியங்களில் நேற்று முன்தினம் முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று இரண்டாவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள் 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 12,376 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதற்காக 6652 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் 10 மணியளவில் வாக்குப்பதிவு நடைபெறுவதை வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆய்வு செய்யயுள்ளார்.