’ டீ கப்’ வழியாக மருந்து செலுத்திய மருத்துவர்கள் ....! கேட்டால் கொரோனா கால டெக்னிக் என விளக்கம்.

’ டீ கப்’  வழியாக மருந்து செலுத்திய மருத்துவர்கள் ....! கேட்டால் கொரோனா கால டெக்னிக் என விளக்கம்.
Published on
Updated on
2 min read

உத்திரமேரூர் அரசு வட்டார மருத்துவமனையில் மூச்சுத் திணறலுக்கு டீ கப்பில் மூக்கு வழியாக மருந்து கொடுத்த காணொளி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் 73 ஊராட்சிகளை கொண்ட தமிழகத்திலேயே மிகப்பெரிய ஒன்றியமாகும். 18 வார்டுகளை கொண்ட பேரூராட்சியை உள்ளடக்கியது.
இங்கு அரசு வட்டார மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆனால் இங்கு போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளி மாணவர் ஒருவரை அவரது பெற்றோர் மூச்சுத் திணறல் காரணமாக உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அவருக்கு அங்கிருந்த மருத்துவர்கள் டீ கப்பில் மூக்கு வழியாக மருந்து செலுத்தியதாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தற்சமயம் வந்த காணொளி ஆனது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலைச்செல்விகள் கேட்டபோது கொரோனா காலகட்டத்தில் பாதுகாப்பு கருதி இந்த வழிமுறைகளை பின்பற்றியதாகவும். மாணவர் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதனால் அதுபோன்ற சிகிச்சை அளித்ததாகவும் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com