"காவிரி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்" - அண்ணாமலை குற்றச்சாட்டு!

Published on
Updated on
1 min read

காவிரி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். 

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் மையக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழ்நாடு அரசியல் களம் குறித்து தாங்கள் ஆலோசித்ததாக கூறினார். நாளுக்கு நாள் சென்னை போராட்ட களமாக மாறுகிறது என குற்றம்சாட்டினார்.

மாநிலத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனையில் எந்த உள்நோக்கமும் இல்லை என அண்ணாமலை  விளக்கம் அளித்தார். மேலும், தமிழ்நாடு அரசு இயந்திரமே வரி ஏய்ப்பு செய்வதாகவும் சாடினார். 

காவிரி விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி கபடி விளையாடுகிறது எனவும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்வது போல் திமுக அரசு நாடகமாடுவதாகவும் ஆவேசமாக கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com