விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
Published on
Updated on
1 min read

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் வழக்கு:

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமம் ஆதரவற்றோர் மற்றும் மனநல  காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த முதியோர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் பல புகார்கள் வெளியாகின.  இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் கெடார் காவல் நிலையத்தில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆசிரம நிர்வாகி ஜுபின் பேபி உட்பட ஒன்பது பேரை கெடார் காவல் நிலைய போலீசார் கைது செய்திருக்கிறார்கள். தொடர்ந்து ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வந்ததாக புகார்கள் காவல்துறைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

சிபிசிஐடிக்கு மாற்றம் :

இந்த நிலையில் இந்த வழக்கை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார். வரும் நாட்களில் சிபிசிஐடி அதிகாரிகள் இந்த வழக்கின் விவரங்கள் அனைத்தையும் பெற்று அவர்கள் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com