டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளுக்கு கூடுதலாக மூன்றாயிரத்து 542 பணியாளர்கள் நியமித்து பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 23 ஆயிரம் பேர் பணியில் இருந்த நிலையில் தற்போது கூடுதல் பணியாளர்கள் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.
ஏற்கனவே 23,000 பேர் பணியில் இருந்த நிலையில், தற்போது 3,542 பேர் சேர்த்து 25,542 பேர் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.
மேலும், கிராமங்களில் ஒரு பஞ்சாயத்திற்கு ஒரு சுகாதார அதிகாரி என்றும் நகரங்களில் வார்டிற்கு ஒரு சுகாதார அதிகாரியும் மாநகரங்களில் தெருக்களின் அடிப்படையிலும் சுகாதார அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காய்ச்சல் பாதிப்பு மற்றும் கொசு பாதிப்பு இருந்தால் பொதுசுகாதாரத்துறையின்
044-29510400 , 044- 29510500 ,என்ற எண்களுக்கும் 9444340496, 8754448477 என்ற எண்களுக்கு தொடர்புக்கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது உடல் உபாதைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த பணியாளர்கள் வீடு வீடாக சென்று சுழற்சி முறையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிப்பார்கள் மேலும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையிலும் ஈடுப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.