டெங்குவின் தொடர்ச்சிதான் ஜிகா வைரஸ் காய்ச்சல்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

டெங்குவின் தொடர்ச்சிதான் ஜிகா வைரஸ் காய்ச்சல் - அதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி
டெங்குவின் தொடர்ச்சிதான் ஜிகா வைரஸ் காய்ச்சல்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
Published on
Updated on
1 min read
"ஓடலாம் நோயின்றி வாழலாம்" என்ற நோக்கத்தை முன்னிறுத்தி மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தன்னுடைய 129 வது மாரத்தானை கிண்டி லேபர் காலனியில் தொடங்கி - மெரினா கடற்கரை வரை 21.1 கிலோமீட்டர் தூரம் ஓடி முடித்துள்ளார்.
பேரிடர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை மக்கள் அதிகப்படுத்திக் கொள்ளும் வகையில் உடற்பயிற்சி ஓட்டப்பயிற்சி மற்றும் நடை பயிற்சி ஆகியவற்றை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த மாரத்தானை ஓடி முடித்த முடித்த பின்னர் மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன் :
பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு தான் கொரானா தொற்று பாதிப்பு ஏற்படுகிறது, எனக்கும் கடந்த ஆண்டு தொற்றால் பாதித்து நலமுடன் இருக்கின்றேன் என்றால் கொரனா பாதிப்பிற்கு பிறகும் நாள்தோறும் 10 கிலோமீட்டர் உடற்பயிற்சிக்காக ஓடிக்கொண்டிருக்கிறேன் அனைவரும் இதை கடைபிடிக்க வேண்டும்.
கடந்த ஆண்டில் அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கான மாரத்தான் போட்டிகள் மறுக்கப்பட்டது ஆனால் மீண்டும் இந்த ஆட்சியில் திமுக சார்பில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல மாரத்தான் போட்டிகள் நடத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகள் சுகாதார பணியாளர்களுக்கும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தேவையில்லாமல் தேங்கி நிற்கும் உடனே அகற்றுவது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
முதல்வரை வழிகாட்டுதல்படி ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. டெங்குவின் தொடர்ச்சிதான் ஜிகா இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று 5 லட்சம் தடுப்பூசிகள் வந்திருக்கிறது இன்று மேலும் 3 லட்சம் மருந்துகள் வர உள்ளது.தொடர்ச்சியாக இன்றும் நாளையும் 8 லட்சம் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு உடனடியாக பிரித்து அனுப்பப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படும்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com